பிரசவ வலி கண்டது இல்லை
கேட்டதுண்டு
நான் கண்ட வலிகளை விட
கேட்ட வலி குறைவு என்பதாலோ என்னவோ
வலிகளை வெளிக்காட்டுவதும் இல்லை
பிறர்படும் வலிகளை கண்டு மனம் நோவதும் இல்லை
பிறர் காணும் வலிகளை காணும் போது எல்லாம் என்மனம்
சொல்வது ஒன்றுதான்
இதுவெல்லாம் ஒரு வலியா
No comments:
Post a Comment