Sunday, September 2, 2012

கானல் நீர்

                                                      கானல் நீரால் தனியாது

             
                                                                           தாகம்


விடை இல்லாத வினா

உலவும் நிலவுக்கு தெரியாது என் நிலை என்னவென்று.

அலையும் என் எண்ணங்களுக்கு தெரியாது நான் யார் என்று.

தேடும்  என்  விழிகளுக்கு தெரியாது என் தேடல் என்னவென்று.

ஓடும் பொழுதுக்கு தெரியாது என் எண்ணங்கள் என்னவென்று.

ஏன்?

எனக்கே தெரியாது ஏன் தான் இப்படி நான் என்று.

விடை இல்லாத வினாவாக நான் !!!!!!!

வாழ்கை பயணம்

வேதனைகளை தாங்கிகொண்டுதான் வாழ்கை.

சோதனைகளை எதிர்கொண்டதுதான் அதன் பயணம்.

ஆசாபாசங்களை வெல்வதே பயணத்தின் நோக்கம்.

வெற்றி என்பதே இலக்கு .

வென்றபின்னர் தெரியும் அதன் இழப்பு.


ரசனை

கனவில் வருவது எல்லாம் 

நிஜத்தில் நடப்பதும் இல்லை.

நிஜத்தில் கடப்பது எல்லாம் 

கணவாய் கண்டதும் இல்லை.

நடந்த கனவுகளை ரசிப்போம். 

நடக்காத கனவுகளை மறப்போம்.





பணம்

மனம் பார்த்து இணைக்கும் மனங்களை விட 

பணம் பார்த்தே திருமனங்கள்  என்பதாலேயே 


கசந்துவிடுகிறது வாழ்க்கை விரைவில் 


மனதிற்கு இதம் பணம் இல்லை என்பதால் !!

விரும்பிய வாழ்கை இனிக்க

விரும்பியது எல்லாம் ஒருநாள் 

வெறுத்து போகலாம் .

வெறுத்த பொருள் எல்லாம் 

மீண்டும் விரும்பும் நிலை வரலாம் .

வாழ்க்கை கசக்காமல் இருக்க ......!


தனிமை

விரும்பியவரை வெறுக்கும் போது 

அவர்கள் பெற்ற வலியும் , வேதனையும் 

நாம் விரும்பியவர் நம்மை வெறுக்கும் போதே 

உணரமுடியும் 

நான் உணர்ந்துவிட்டேன் 

இன்று ..........


Sunday, August 26, 2012

ஆலகாலம்

அளவில்லா அன்பில் துளி ஆலகால விஷம்

அன்பு முழுதும் ஆலகாலம் ஆகிவிட்டது 

என்ன கடைந்தாலும் எங்கிருந்து வரும் 

அந்த 

அமிர்தமான அன்பு !!!

Saturday, August 25, 2012

கசந்த வாழ்க்கை

மனம் பார்த்து இணைக்கும் மனங்களை விட 

பணம் பார்த்தே திருமனங்கள்  என்பதாலே என்னவோ 

கசந்துவிடுகிறது வாழ்க்கை விரைவில் 


மனதிற்கு இதம் 

பணம் இல்லை என்பதால் !! 

Tuesday, July 10, 2012

கண்ணிப்பெண்

எதிர் பார்ப்புகளின் வலையில் 
ஏமாற்றங்களின் பிடியில் 


இன்னும் எத்தனை இரவுகளோ 
ஏங்கும் என் இளமை !!!

மனதின் மென்மை

மனதை சுற்றிலும் படர்ந்து கிடக்கும் முட்கள் 
புதராய் மண்டி கிடக்க 
எங்கிருந்து தெரியும் மனதின் மென்மை 
மீறி தொட்டால் !!!!!!!!!!

Monday, July 9, 2012

விக்கல்

நினைக்க கூட நேரம் இல்லாத வேலைக்கு இடையிலும் 


என்னையே தான் நினைக்கிறது ஒரு மனது என்பதை 


காட்டும் என் இடைவெளி இல்லா விக்கல்கள் 

அன்பு கரம்

விழியோர நீர் வெள்ளம் என பாயும் முன் 
வழி உண்டு என்று 
அனைத்து விடு தாயே 
உன் அன்பு கரம் கொண்டு !!!!!

Sunday, July 8, 2012

தாய் மடி

கண்ணை பரிக்கும் துக்கம்  அதையும் தாண்டிய ஏக்கம்

சலனமும் சஞ்சலமும் செய்த கூட்டனிக்கு
 பலியாகும் இரவுகள்
 பலாய் போன என் தூக்கம்
 தவறாது தரும் 

தாய் மடியும் 

இன்று கணவாய் போனதே !!!!!!!!

கனவுகள்

  • மனதில் தோன்றும் பல ஆசைகளை 
  • அதே மனதில் தான் புதைக்கிறோம் 

  • சில நிழல்களாக 

சில நிஜங்களாக 
பற்பல கனவுகளாக 

சிறந்த வாழ்க்கை

 எல்லாம் பொது என்றும் இருக்க வேண்டாம் 
இது எல்லாம் என்னுடையது என்று 
எதையும் தனிமை படுத்தவும் வேண்டாம் 
வாழ்க்கை சிரக்கும் 

நான் கண்ட வலி

பிரசவ வலி கண்டது இல்லை 
கேட்டதுண்டு 
நான் கண்ட வலிகளை விட 
கேட்ட வலி குறைவு என்பதாலோ என்னவோ 
வலிகளை வெளிக்காட்டுவதும் இல்லை 
பிறர்படும் வலிகளை கண்டு மனம் நோவதும் இல்லை 
பிறர் காணும் வலிகளை காணும் போது எல்லாம் என்மனம் 
சொல்வது ஒன்றுதான் 

இதுவெல்லாம் ஒரு வலியா 

வெற்றி!!!

வாழ்க்கைழ செய்தவன் தப்பே செய்தாலும் 
அதுவும் நன்மையே 

தோத்தவன் நல்லதே செய்தாலும் 
தப்பே 
வாழ்கையவே செய்க்க நெனைகிறவன் 
எதுபண்னாலும் வெற்றியே !!!!!!

Sunday, July 1, 2012

வாழ்க்கை

கண் மூடியதும் தூக்கம் !
தூக்கத்தில் மரணம் !!
மரணத்திற்கு பிறகும் 
வாழ்க்கை !!!



வாழ்ந்தால் இவர் போல என்று !!!!!! 

இனிய பாடல்

ஒவ்வொரு பாடல் வரிகளும் 
யாரோ ஒருவரின் கற்பனை தான் 
வரிகளை உணர்ந்தவனுக்கு ரசனையாக 
அதன் வலிகளை உணர்ந்தவனுக்கு 
உயிராக 

Thursday, June 14, 2012

மன வருத்தம்

நல்ல நிலம்

நல்ல நிலம் தனில் விதைத்த விதை 
என்றும் வீணாவதில்லை 
நிலம் தன்னில் களையும் வரும்,
முள்ளும் வளரும் ,
களை தனை கலைந்து ,
முள் தனை முறித்து ,
விதை தனை விருட்சம் ஆக்கி 
காப்போம் நம் 
            சந்ததியை ...........

படைப்பு

கண்கள் இரண்டான போதிலும் 
பார்வை ஒன்றே !!!!!



                                         

இதயம் ஒன்றானபோதிலும் 
எண்ணங்கள் பற்பலவே !!!!!!!!!!

Thursday, May 24, 2012

பிறந்த நாள்

  • பிறந்த நாளில் பிறந்த பிள்ளைதனை வாழ்த்துவதை விட
  • பெருமை தரும் பிள்ளை பெற்றவளை வாழ்த்துவதே 
  • பிறந்தவருக்கும், பெற்றவளுக்கும் 
  • பெருமை! பெருமை!! பெருமையே!!! 

சுகமான சுமைகள் .....

சுமைகள் கூட 
சுகம் தான் 
சுமப்பது
 யாருக்காக எனும் போது !!!!!!

Friday, May 11, 2012

கசந்த காதல் .........

கனிந்த பின் காதல் 
கசப்பதன் காரணம் தான் என்ன?
நீண்ட நாள் வினாவிற்கு 
இன்றுதான் விடை பெற்றேன் !!!
என் காதல் இன்னும் இனிப்பதால் !!!!!!

உணர்ச்சி

உணர்சிகளுக்கு 
உணர்வுகளை 
அடிமை ஆக்கிவிட்டால் 
உணர்ச்சி வசப்படும் போது எல்லாம் 
உணர்வுகள் அதை 
ஒழுங்கு படுத்தும் 

நட்பு

தொலை தூர பயணங்கள் 
துணிந்தால் 
மட்டும் இல்லை 
தகுந்த 
துணையும் 
இருந்தால் 
மட்டுமே 
நட்பை போல !!


இரவு

கானல் நீராய் போன 
உறக்கத்திற்காக 
விடியளை தான் விரைந்து வர சொல்ல முடியும்மா 
இல்லை 
நிலவை தான் விரட்ட முடியுமா 

ஏமாறும் குரங்கு மனம்

தனக்கு தான் எல்லாம் என எண்ணி 
ஏமாறும் 
குரங்கு மனதிற்கு 
என்றுதான் புரியபோகிறதோ 
எதுவும்! எவர்க்கும்!! எப்போதும்!!
சொந்தமில்லை என்று !!!!!
 

கோளாறு

இறைவன் படைப்பில் 
அனைத்திற்கும் காரணம் உண்டு !
என்னை படைத்தான் 
என்ன காரணம் என்னவென்றே தெரியாமல்!!! 
படைப்பில் கோளாரா! 
இல்லை !!
இல்லை!! 
படைத்ததே கோளாறு தானோ ?

சுமைகள்!!!!

தோல் கொடுக்க தோழனோ ,
தோழியோ 
இருந்தாலும் 
கொடுக்கும் தோலுக்கும் 
சுமைகள் இருக்கும் ........

Tuesday, April 24, 2012

சிரிப்பு

யாருக்காக சிரித்தாலும் 
நன்மை நமக்கு மட்டுமே !!!!!!!!

மன்னிப்பு

மன்னிப்பு கேட்பது வழக்கம்
ஆகும் வாழ்கையில்
தண்டனை  இல்லாது போனால்!!!!!
செய்யும் தவறுகள்
மன்னிக்க முடியாததாக
போய் விடும் !!!!!!
                                                        அன்பால் அரவணைத்து 
தண்டிப்போம் !!!!!!!!!!!!!!!

மாய வாழ்க்கை

இயற்கையின் படைப்புகள் அனைத்தும்
இயல்பாய் இருக்க
இடையில் வந்த
இயந்திர வாழ்க்கை மனித வாழ்வின் 
இயல்பை மாற்றியதன்
மாயம் தான் என்னவோ ?

காதலில் மட்டும் சாத்தியம்


பொய் சொல்வதை ரசிப்பது ஏன்
காதலில் மட்டும் சாத்தியம் ஆகிறது
காதல் உண்மை என்பதாலா!!!
இல்லை!!
பொய்கள் சொல்லும் 
காதலே உண்மை என்பதாலா ..!

வாழ்க்கை பயணம்

பயணம் செயும் தூரம் தெரியாத 
வாழ்க்கை பயணத்தில்  வாழ்கிறோம் !
பாதைகள் பல ஆனபோதும் 
பயணிக்க ஆசைபடுகிறோம்!!
சில இனிமையாக ...
சில கடினம்மாக....
பயணப் பாதையில் 
பலர் வந்து சென்றாலும் 
பாதை முடியும் வரை 
எவரும் நிரந்தரம் அல்ல !!!!!!!!!
நிரந்தரம் இல்லாத பயணம் பற்றி 
நிகழ்வில் கவலை எதற்கு .........

வரலாற்று வாழ்கை

  • இறந்தவர்களின் கதைகள் சொல்லும் வரலாற்றில் தான் எல்லோரும் இடம்பிடிக்க ஆசை படுகிறோம்.
  • எத்தனை பேருக்கு தெரியும் 
  • இருக்கும் நாள் வரை நாம் வாழும் 
  • ஒவ்வொரு நொடியும் 
  • பல வரலாறு என்று ..........


Sunday, February 12, 2012


தெளிந்த குளத்தில் ஒரு
கல் ...................!!!
நிலையான மனதில் ஒரு
பழி சொல்........ !!!!

நினைவுகள்


நிழல் கூட நம்மை விட்டு ஒருநாள் பிரிந்து போகலாம் !!!
ஆனால்
என்றும் பிரியாது நாம் விட்டு செல்லும் பசுமை மாறாத
நினைவுகள் !!!
என்றும் !என்றென்றும் !!

Friday, February 10, 2012

ஆனந்த கண்ணீர்


உணர்சிகளின் வுச்சகட்ட வெளிப்பாடு
கண்ணீர் !!!!!!!
ஆனந்த கண்ணீராக வரும்போது
ஏற்றுகொள்கிறோம் !!!!!!
அதுவே
துக்கமாக வந்தால்
வருந்துகிறோம் !!!!!!!!

நிஜங்கள்


நிழல் தேடும் மனங்கள் !
நிஜம் பார்க்க மறுப்பதேனோ !!
நிழல் தரும் இனிமை !!!
நிஜங்களிடம் இல்லாததாலோ !!!!

ரகசிய சிநேகிதம் !!!


சிநேகிதம் ஏன்?
ரகசிய சிநேகிதம் ஆச்சு ?
நம் நட்புக்குள் ஏதும் ரகசியம் உண்டென்று
ஊர் பேச கூடாது என்றா !
இல்லை
நமக்குள் ரகசியங்கள்
இருக்ககூடாது என்றா !!

பெற்றவள் தூங்க
அவள் பெற்றதை
அவளை பெற்றவள்
கவனிக்கிறாள்.
அவள் பெற்றதையும்
சேர்த்து !
இதில் எந்த தாய் பாக்கியம் செய்தவள்
எந்த குழந்தை புண்ணியம்
செய்தது !!!!

Thursday, February 9, 2012

மதிப்பு


மண்ணை விட்டு பிரியும் போது நாம்
நம் சந்ததிகளுக்கு விட்டு செல்ல வேண்டிய
மிக பெரிய சொத்து
மதிப்பும்! மரியாதயுமே !
காசு பணம்லாம்
காலபோக்கில்
காணாமல் போகலாம் !!
பெற்ற மதிப்பே இறுதி வரை
கூட வரும் !
இறந்த பின்னரும்
பெற்ற நல்ல பெயர்
நிலைத்து நிற்கும் !!!

Wednesday, February 8, 2012

தழும்புகள்


கள்ளம் இல்லா மனதில் கடும் விஷம் கலக்க !
நீண்ட நாள் முயற்சியில் !!
விஷம் அது முறிந்தும் !!!
விட்டு சென்ற ரணங்கள் !!!!
பரிசுகளாக !!!!!
மனதில் !!!!!!